இன்று யாழ். வரும் நீதி அமைச்சர் - வெடிக்க உள்ள மாபெரும் மக்கள் போராட்டம்

Jaffna SL Protest Harshana Nanayakkara Protest
By Thulsi Jun 19, 2026 01:54 AM GMT
Report

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை வலியுறுத்தி செம்மணியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தப் போராட்டத்துக்கான அவசர அழைப்பை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தரவுள்ள நிலையிலேயே, அதற்கு முன்னதாகப் பிற்பகல் 2 மணிக்கு இந்த மக்கள் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

தடயவியல் விசாரணை

இது தொடர்பாக வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டியில் பின்வரும் பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இன்று யாழ். வரும் நீதி அமைச்சர் - வெடிக்க உள்ள மாபெரும் மக்கள் போராட்டம் | Chemmani Island S Largest Mass Grave Protest Today

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மற்றும் தடயவியல் விசாரணைகளுக்குச் சர்வதேசத் தரப்பினரின் நேரடிப் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

உள்நாட்டுப் பொறிமுறை நிராகரிப்பு: பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக ஏமாற்றத்தையே அளித்து வரும் இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைகள் முற்றாக நிராகரிக்கப்படுகின்றன.

மிகப்பெரிய மனிதப் புதைகுழி: இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி - சிறீதரன் எம்.பி

மிகப்பெரிய மனிதப் புதைகுழி: இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி - சிறீதரன் எம்.பி

மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம்

மனிதப் புதைகுழிகளுக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் சர்வதேசப் பொறிமுறையூடான நம்பகமான நீதியே பெற்றுத்தரப்பட வேண்டும்.

"செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட இலங்கையின் நீதி அமைச்சர் வருகை தரும் நிலையில்..." என்ற தலைப்பின் கீழ், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித என்புக் கூடுகளின் புகைப்படங்களைத் தாங்கி இந்த அழைப்புச் சுவரொட்டி வெளியாகியுள்ளது.

இன்று யாழ். வரும் நீதி அமைச்சர் - வெடிக்க உள்ள மாபெரும் மக்கள் போராட்டம் | Chemmani Island S Largest Mass Grave Protest Today

அதன்படி, இன்று 19.06.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குச் செம்மணி அகழ்வாய்வுத் தளம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இந்த மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

நீதி அமைச்சரின் வருகையின் போது தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டையும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தும் நோக்கில் உறவினர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களை இந்தப் போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

செம்மணியில் இன்றும் மீட்கப்பட்ட குழந்தையின் என்புக்கூடு : சான்று பொருட்களும் கண்டெடுப்பு

செம்மணியில் இன்றும் மீட்கப்பட்ட குழந்தையின் என்புக்கூடு : சான்று பொருட்களும் கண்டெடுப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி