மிகப்பெரிய மனிதப் புதைகுழி: இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி - சிறீதரன் எம்.பி

Sri Lanka Army Sri Lanka Police S. Sritharan chemmani mass graves jaffna
By Rakesh Jun 18, 2026 03:55 AM GMT
Report

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழர்கள் மீது புரியப்பட்ட இந்த இனப்படுகொலையைச் சர்வதேச சமூகம் இனியாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையே இந்தப் புதைகுழியில் இருந்து மீட்டெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் உலகுக்குப் பறைசாற்றுகின்றன என்றும் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித எச்சங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

மனித என்புத் தொகுதிகள்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- "செம்மணி மனிதப் புதைகுழியில் மிகக் குறுகிய நாள்களுக்குள் 380 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

மிகப்பெரிய மனிதப் புதைகுழி: இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி - சிறீதரன் எம்.பி | Sridharan Says Planned Genocide Againsts Tamils

இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகப்படியான மனிதப் பேரவலம் அரங்கேறிய ஒரேயொரு புதைகுழியாகவும், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான நேரடிச் சாட்சியமாகவும் இந்தச் செம்மணித் தளம் இன்று மாறியுள்ளது.

இங்கு இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த இடம் ஒரு நரகம்..! மரண தண்டனையே தாருங்கள் - கதறும் சுரேஷ் சலே

அந்த இடம் ஒரு நரகம்..! மரண தண்டனையே தாருங்கள் - கதறும் சுரேஷ் சலே

உலகத்தினுடைய மனச்சாட்சி

அந்தவகையில், உலகத்தினுடைய மனச்சாட்சியையே உலுக்கிக் கிளறிவிடுகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களமாக இந்தச் செம்மணி மனிதப் புதைகுழி அமையப் போகிறது.

மிகப்பெரிய மனிதப் புதைகுழி: இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி - சிறீதரன் எம்.பி | Sridharan Says Planned Genocide Againsts Tamils

சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தங்களின் மேலான கரிசனையைச் செலுத்த வேண்டும்.

எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்து, இன்றுவரை ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் மக்களுக்கான உண்மையான நீதியைப் பெற்றுத் தருகின்ற ஓர் அணையாத சுடராகவும், தமிழ் மக்களுடைய நீதிக்கான ஒரு பிரதான திறவுகோலாகவும் இந்தச் செம்மணி அமைய வேண்டும் என்பதே எங்களின் பலத்த எதிர்பார்ப்பாகும் என்றார்.

திக்திக் சிசிடிவி காட்சி..! காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவர் சடலம்

திக்திக் சிசிடிவி காட்சி..! காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவர் சடலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி