யாழில் வெடிக்கும் போராட்டம்: பெரும் மனிதப் புதைகுழி என்ற சொல்லை திட்டமிட்டு நீக்கினார் சோமதேவ

Jaffna chemmani mass graves jaffna Protest
By Theepan Oct 24, 2026 02:18 PM GMT
Report

செம்மணி மனித படுகொலை தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என நவம்பர் 16ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில் செம்மணி மனிதப் புதைக்குழியில், 110 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியில் 583 மனித எலும்புக் எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழில் ஆடை இல்லாமல் புதைக்கப்பட்ட மக்கள் - ராஜ் சோமதேவ ஒரு கைக்கூலி! வெகுண்டெழும் தரப்பு

யாழில் ஆடை இல்லாமல் புதைக்கப்பட்ட மக்கள் - ராஜ் சோமதேவ ஒரு கைக்கூலி! வெகுண்டெழும் தரப்பு

மரபணு பரிசோதனைகள்

அவ்வாறான நிலையில் பேராசிரியர் ராஜ சோமதேவா நீதிமன்றத்திற்கு ஒரு இடைக்கால அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருக்கின்றார். அந்த அறிக்கையானது எந்தவிதமான ஆய்வுகளோ, மரபணு பரிசோதனைகளோ அல்லது தொல்லியல் தடவியல் சம்பந்தமான எந்தவித ஆய்வுகளோ மேற்கொள்ளாது.

யாழில் வெடிக்கும் போராட்டம்: பெரும் மனிதப் புதைகுழி என்ற சொல்லை திட்டமிட்டு நீக்கினார் சோமதேவ | Chemmani Mass Grave Public Protest In Jaffna

அதொரு மனித புதைக்குழி என்றதையேயும் குறிப்பிடாமல் அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருக்கின்றார். நாம் அதை முற்றாக நிராகரிக்கின்றோம்.

இனப்படுகொலையின் சாட்சியமான பெரும் மனித புதைக்குழியாக செம்மணி மனித புதைக்குழி காணப்படுகிறது. எனவே கடந்த காலங்களில் போன்று கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி, சதோச மனித புதைக்குழிகள் போன்ற புதைக்குழிகளை இவரே மூடியிருக்கின்றார்.

எனவே நாம் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருக்கின்றோம். புதைகுழி அகழ்வில், சர்வதேசம் தலையிட வேண்டும், சர்வதேச நிபுணர்கள் வரவழைக்கப்பட வேண்டும், சர்வதேச நீதி கோருவதற்காக சர்வதேசத்தின் தடவியலாளர்களை இங்கு கொண்டுவரப்பட்டு மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மறைவுக்கு முன் ஈழத்தமிழர்களுக்காக பாடிய தேனிசைத் தென்றல் தேவா

மறைவுக்கு முன் ஈழத்தமிழர்களுக்காக பாடிய தேனிசைத் தென்றல் தேவா

சர்வதேச நீதி 

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு பரிசோதனைகளை ஒரு சர்வதேச கண்காணிப்பின் ஊடாகவே அது பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறோம்.

யாழில் வெடிக்கும் போராட்டம்: பெரும் மனிதப் புதைகுழி என்ற சொல்லை திட்டமிட்டு நீக்கினார் சோமதேவ | Chemmani Mass Grave Public Protest In Jaffna

அதனை தொடர்ந்து வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி மாலை 2 மணிக்கு செம்மணி மனித புதைக்குழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும். சர்வதேச விசாரணை மூலமாகவே எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

இனப்படுகொலையின் பெரிய சாட்சியாகின்ற இந்த மனித புதைக்குழிக்கு நாம் சர்வதேச நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு அனைவரும் ஒன்று திரண்டு வர வேண்டும் என்பதை நாங்கள் இந்த இடத்திலே கூற விரும்புகின்றோம்.

எனவே நாம் தொடர்ச்சியாக இந்த செம்மணி மனித புதைக்குழிக்காக சர்வதேச நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ச்சியாக போராடுவோம். எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரி நிற்கிறோம்.

மன்னாரில் விபத்திற்குள்ளான இராணுவ வாகனம் : இராணுவ வீரர் பலி

மன்னாரில் விபத்திற்குள்ளான இராணுவ வாகனம் : இராணுவ வீரர் பலி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024