செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் (Jaffna) நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார்.
பாதீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்று வரும் அக்டோபர் 01ம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்க்காகன அறிக்கையை பெற்றுக் கொள்ள தவணையிட்டுள்ளது.
அடுத்த கட்ட அகழ்வுப்பணி
அக்டோபர் 01ம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதே மாதம் 21ம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நிறைவில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சிறார்களின் என்புக்கூட்டுத் தொகுதிகளும் காணப்படுவதுடன் சிறார்களின் ஆடைகள், பொம்மைகள், காலணிகள், புத்தகப்பை, பால் போத்தல்கள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
