செம்மணியில் மனதை உருக வைக்கும் சம்பவம் : குழந்தையை அரவணைத்தவாறு கிடந்த எலும்புக்கூட்டு தொகுதி
chemmani mass graves jaffna
By Sumithiran
செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
37 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு
அதன் அடிப்படையில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 37 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்