செம்மணி பேரவலம் : இன்றும் கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக் கூடுகள்
யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டது.
பல்வேறு நபர்களின் பங்களிப்புடன் அகழ்வுப்பணி
அகழ்வு பணி தொல்லியல் பேராசிரியார் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
164 என்புத் தொகுதிகள் முழுமையாக மீட்பு
அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் முதலாவதாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் 09 மனித என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் 164 என்புத் தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
