செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம்: சர்வதேசத்துக்கு பறந்த கோரிக்கை

Jaffna Sri Lanka Law and Order chemmani mass graves jaffna
By Raghav Jun 29, 2025 12:50 PM GMT
Report

செம்மணி சித்துப்பாத்தில் கண்டறியப்படுள்ள மனிதப்புதைகுழி அகழ்வு சர்வேதேச கண்காணிப்பின் கீழ் சர்வதேச நியமங்களை பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமாக, யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பாக எமது தீவிர கவனத்தையும், நிலைப்பாட்டையும் வெளியிடுகிறோம்.

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை

சிறிலங்காவின் போர்குற்றங்கள் கை விடப்படுமா? வோல்கர் பயணத்துடன் அமெரிக்க சைகை

சர்வதேச நீதிப்பொறிமுறை

ஏற்கனவே தமிழர் தாயக பரப்பிலும் சிறிலங்காவிலும் 22 க்கும் மேற்பட்ட மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழி, மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுகள் நிறைவுபெற்று மிக அண்மைய காலமாக தொடர்சியாக வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு இடம்பெற்றுவருகின்றதே தவிர இந்த மனிதப்புதைகுழி தொடர்பான உண்மை இன்னும் உரியவகையில் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படவில்லை.

செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம்: சர்வதேசத்துக்கு பறந்த கோரிக்கை | Chemmani Mass Graves Investigation

எனவே தான் நாங்கள் உள்நாட்டு நீதிபொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தவர்களாக தொடர்சியாக இவ்வாறாக கண்டுபிடிக்கப்பட்டு அகழப்படும் மனிதப்புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பையும், சர்வதேச நீதிப்பொறிமுறையையும் வலியுறுத்தி வருகின்றோம்.

தற்போதுவரை யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தில் மீட்கப்பட்ட அல்லது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் எண்ணிக்கை 14-ஐத் தாண்டியுள்ளது இதில் சிறு குழந்தைகளின் உடல எச்சங்களும் அடங்குவதாக அறிகின்றோம். 

மிகவும் கொடூரமான முறையில் ஒன்றன்மீது ஒன்றாக பலர் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக இந்த புதைகுழி அகழ்வு வெளிப்படுத்துகின்றது.

ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்படும்போது, அந்த இடம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப "மனிதப் புதைகுழி" என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம். 

செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம்: சர்வதேசத்துக்கு பறந்த கோரிக்கை | Chemmani Mass Graves Investigation

எனவே, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான அகழ்விடத்தினை உடனடியாக ஒரு "மனிதப் புதைகுழியாக" பிரகடனம் செய்யுமாறும், அதன் அடிப்படையில் அகழ்வுப் பணிகளை மேற்படி மயான வளாகம் முழுவதிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விரிவுபடுத்துமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செம்மணி முழுவதும் போர் இடம்பெற்ற கடந்த காலங்களில் பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக கிரிசாந்தி குமாரசாமி என்ற பாடசாலை சிறுமியின் கொலை தொடர்பான நீதிமன்றங்களில் இடம்பெற்ற வழக்குகளில் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணைக்குழுக்களுக்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, இந்த அகழ்வு நடவடிக்கை ஒரு தனிப்பட்ட சம்பவமாக அல்லாமல், பெரும் அளவிலான அட்டூழியங்கள் இடம்பெற்ற தரவுகளை வெளிக்கொணரும் முக்கியமான வழியாக காணப்பட வேண்டும். செம்மணியின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு வெவ்வேறு மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். ஆகவே,

1) செம்மணி சித்துப்பாத்தில் இடம்பெறும் அகழ்வு நடவடிக்கையை மனிதப் புதைகுழி விசாரணை என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கோருகின்றோம்.

2)அகழ்வுப் பணிகளை சர்வதேச நிபுணர்கள் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையுடன், சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப முன்னெடுக்குமாறு கோருகின்றோம்.

3) மனிதப்புதைகுழி தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்பட்டு, வெளிப்படைதன்மையோடு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றோம்.

4)மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கையை ஊடகங்கள்/ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுதந்திரமாக மட்டுப்படுத்தல்கள் இன்றி அறிக்கையிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

5) எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகைதருவார் என எதிர்பார்க்கப்படுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வடக்குக்கு பயணம் செய்து செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட்டு நீதியை நிலைநாட்டுவதற்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை இவ்வாறு கண்டுபிடிக்கப்படும் மனிதப்புதைகுழிகள் தொடர்பாக விசாரணைகள் மூடி மறைப்புக்கள் இன்றி வெளிப்படைத்தன்மையோடு சர்வதேச சமூகத்தின் பங்கேற்போடு இடம்பெறும்போதுதான் வெளிப்படும் என நாங்கள் வலுவாக நம்புகின்றோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா ஆணையாளரின் செம்மணி விஜயம்... தமிழர்களுக்கு பச்சைக் கொடி : சிறீதரன் சுட்டிக்காட்டு

ஐ.நா ஆணையாளரின் செம்மணி விஜயம்... தமிழர்களுக்கு பச்சைக் கொடி : சிறீதரன் சுட்டிக்காட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025