செம்மணி தடயப் பொருட்களை அடையாளம் காண மக்களுக்கு அழைப்பு
யாழ். அரியாலை சித்துப்பாத்தி மாயானத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட தடய பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காண்பதற்கான, அழைப்பாணையை யாழ்.நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குறித்த நீதிமன்ற அழைப்பாணை யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 'யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள அரியாலை சித்தப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள், உடைகள் மற்றும் பிறபொருட்கள் (Artifacts) ஆகியவை பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
யாழ்.நீதிமன்றம்
இந்தக் காட்சிப்படுத்தல் 2025 ஆகஸ்ட் 5ஆம் திகதி பிற்பகல் 1:30 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்சிப்படுத்தப்படும் பொருட்களைப் பார்வையிட்டு, அடையாளம் காணும்பட்சத்தில், நீதிமன்றுக்கோ அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கோ தகவல் தெரிவித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்தக் கட்டளை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டத்தின் பிரிவுகள் 7 மற்றும் 124இன் கீழ் நீதிவானின் தற்றுணிவின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா
