செம்மணி புதைகுழி விசாரணை மாற்றம்: சிசிரிவி உரிமை ஒருவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட பின்னணி
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் கடந்த 21ஆம் திகதி முதல் காவல்துறையினரிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் இவ்வளவு காலமும் மூன்றுபேரால் கண்கானிக்கப்பட்டு வந்த சிசிரிவி உரிமை ஒருவருக்கு மாற்றப்பட்டு, மட்டுப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த மாற்றத்தின் பின்னணியில், மனித உரிமை மீறல்கள் மற்றும் 1990களில் இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த காணாமல் போனவர்களின் விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், செம்மணி புதைகுழியில் 1995-1996 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணம் அரச படைகளால் மீட்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், செம்மணி தொடர்பில் சிசிரிவி பார்வை உரிமை பெற்றிருந்த, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த அரியாலையை சேர்ந்த கிருபா என்பவரின் உரிமையும் இதன்மூலம் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதுபோன்ற சில மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் சித்துபாத்தி மயானத்தின் தற்போதைய நிலை தொடர்பில் விளக்குகிறது தொடரும் காணொளி...
