கிருஷாந்தி படுகொலையுடன் புதையுண்ட தொடர்கொலைகளின் மர்மங்கள்
கிருஷாந்தியின் படுகொலை 1996 ஆம் செம்டம்பர் ஏழாம் திகதி இடம்பெற்ற நிலையில், இது செம்மணி மனித புதைக்குழி விவகாரம் வெளி உலகிற்கு தெரிய முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தநிலையில், கிருஷாந்தியின் படுகொலைக்கு சில வாரங்களுக்கு முன்னர் கிருஷாந்தியின் பள்ளி தோழி ஞனநாதன் சானந்தி என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனால், அந்த கொலையின் பிண்ணனியில்தான் கிருஷாந்தியின் கொலையும் இடம்பெற்றிருக்கலாம் என மக்கள் தொட்டு பலதரப்பட்ட வகையில் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அத்தோடு, கிருஷாந்தி யாழ் வரவேற்பு வளைவில் 11.30 மணிக்கு நிற்பதாக பார்ப்பவர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு மணிக்கு பிறகே அவரை அந்த இடத்திலிருந்து காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், இடைப்பட்ட மணித்தியாலங்களில் யாரோ ஒருவரின் கட்டளைக்கு இணங்கி அவர் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அதற்கு பிறகே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பிண்ணனியில் கிருஷாந்தியின் படுகொலையை வெறும் தமிழ் பெண்ணின் கொலை என மட்டும் நினைத்து கடந்து செல்ல முடியாது எனவும் இது தொடர் கொலைகளுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற நிலையில், அதனை கேட்க எவ்வித சட்டமும், உரிய அதிகாரிகளும் இல்லை எனவும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியை சேர்ந்த கிருபாகரன் என்பவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயங்களை அவர் ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்த நிலையில், மேலும் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் தொடர்கின்றது இக்காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
