பத்தாவது முறையாக இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு ஐ.பி.எல் சுற்றின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைடன்ஸ் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றது.
சென்னை அணி சார்பில் ருதுராஜ் 60, கான்வே 40, ரஹானே 17 , ஜடேஜா22 ஓட்டங்கள் எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி
இந்நிலையில், 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பாக சுப்மன் கில் 42 , ரஷித் கான் 30, ஷானகா 17 ஓட்டங்கள் எடுத்தனர்.
சென்னை அணி தரப்பில், ஜடேஜா, தீக்ஷனா, ஷாஹர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.