சர்வதேச நீதிப் புலனாய்வு! முக்கிய கொலை வழக்கில் ஷிரந்தியின் சிரிலிய மோசடி முடிச்சு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கடந்த 27.01.2026 அன்று காவல்துறை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் தனிப்பட்ட காரணங்களால் முன்னிலையாக முடியாது என்று அவர் தனது சட்டக் குழு மூலம் தெரிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கு முன்னிலையாக இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை
சிரிலிய கணக்கு மற்றும் அங்கு நடந்த சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பாக ஷிராந்தியிடம் FCID விசாரணை நடத்தி வருகிறது.

முந்தைய நல்லாட்சி காலத்தில், ஜூன் 2015 இல் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அந்த நேரத்தில், அப்போதைய சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அவரது வாக்குமூலம் பெறப்பட்டது.
மகிந்த ராஜபக்ச காலத்தில், இலங்கை வங்கியின் சுதுவெல்ல கிளையில் 'சிரிலிய சவிய' என்ற பெயரில் ஷிரந்தி மற்றும் இரண்டு பேரின் பெயர்களில் ஒரு கூட்டுக் கணக்கு திறக்கப்பட்டது.
அந்தக் கணக்கில் ஆரம்பத்தில் இருந்தே தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஷிரந்தியின் தேசிய அடையாள அட்டை எண் 222222222V எனக் குறிப்பிடப்பட்டிருந்தததாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் அத்தகைய தேசிய அடையாள அட்டை எண் எதுவும் இல்லை. மூவரின் முகவரிகளும் 'கார்ல்டன், தங்காலை' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு மற்றுமொரு மோசடி விவகாரத்தில் ஷிரந்தியின் அடையாள அட்டை எண் நாடாளுமன்றத்தில் மகிந்த ஜெயசிங்கவால் சுட்டிக்கபட்டப்பட்டது.
ஷிரந்தி ராஜபக்ச சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு மோசடி நில பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கோரப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க 21.மார்ச்.2025 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் அன்றே மேற்படி தகவல் வெளிப்படுத்தப்பட்டது.
கம்பஹா, இம்புல்கொடவில் பல ஏக்கர் நிலப்பரப்பில் "நாகனானந்தா சர்வதேச பௌத்த தியானப் பயிற்சி மையம்" என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ள இடத்தில், எந்த மத நடவடிக்கைகளும் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்று துணை அமைச்சர் எடுத்துரைத்தார்.
நில மோசடி
அப்தோதைய ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளைப் பயன்படுத்தி இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

ஜெயசிங்க ஒரு குழுவுடன் அந்த இடத்திற்குச் செல்ல முயன்றார், ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், அவர் இந்த விஷயத்தை ஆராய்ந்து இன்று நாடாளுமன்றத்தில் கூடுதல் விவரங்களை வெளியிட்டார்.
கேள்விக்குரிய நிலம் ஒரு கோவிலுக்கு சொந்தமானது அல்ல என்பதை அவர் விளக்கினார்:
"இந்த நிலம் மகிந்த ஆன்மீக அறக்கட்டளைக்குச் சொந்தமானது. சில நிலங்கள் ரூ. 500,000 க்கு வாங்கப்பட்டு பின்னர் ரூ. 10 மில்லியனுக்கு விற்கப்பட்டன. இந்த நிலங்களில் பல தங்காலை கார்ல்டன் ஹவுஸில் வசிக்கும் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்சவுக்குச் சொந்தமானவை.
இம்புல்கோடா பகுதியில் உள்ள மற்றொரு நிலம் ரூ. 1 மில்லியனுக்கு வாங்கப்பட்டு பின்னர் ரூ. 12 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
இந்த நில பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்துமாறு நான் சி.ஐ.டியிடம் கோரியுள்ளேன். கூடுதலாக, களனியில் உள்ள ஒரு நிலத்திற்கு தனது விஜயம் தொடர்பான ஊடக அறிக்கைகளை அவர் மறுத்தார், அவை தவறாகப் முறைப்பாடளிக்கப்பட்டதாக கூறினார்.
மார்ச் 2, 2012 அன்று, கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன, இதில் மூன்று குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமான எண் 317 இல் உள்ள உயர் இம்புல்கோடாவில் உள்ள ஒரு நிலம் அடங்கும். பின்னர் இது தங்காலை, எண் 19 கார்ல்டன் ஹவுஸில் வசிக்கும் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டது.
ஷிரந்தி ராஜபக்ச
வடக்கு மகோல வீதி பகுதியில் உள்ள மற்றொரு நிலம் ஆரம்பத்தில் அங்கு வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமானது, ஆனால் பின்னர் ஷிரந்தி ராஜபக்சவால் கையகப்படுத்தப்பட்டது. ஷிரந்தி ராஜபக்சஷவின் தேசிய அடையாள அட்டை எண் ஆவணங்களில் 535253314V எனப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார் .
"சபாநாயகர் அவர்களே, இங்குள்ள அனைத்து ஆவணங்களும் ஆதாரமாக என்னிடம் உள்ளன. இந்த நிலங்கள் எதுவும் ஒரு கோவிலின் கீழ் அல்லது ஒரு புத்த துறவியின் கீழ் பதிவு செய்யப்படவில்லை” என்றார்.
ஆக இந்த இடத்தில் அடையாள அட்டை எண் தொடர்பில் பாரிய கேள்வி எழுகின்ற நிலை காணப்படுகிறது.
இதன்படி சிரிலிய கணக்கு தொடர்பாக, பொதுப் பாதுகாப்புத் துணை அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் பின்வருமாறு கூறியிருந்தார். இந்தக் கணக்கு இப்போது போலிக் கணக்கு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கணக்கின் ஆணைத் தாள் வங்கியிலிருந்து காணாமல் போய்விட்டது. ஐயோ! ஒரு கணக்குத் திறக்கப்பட்டு, ஆணைத் தாள் காணாமல் போய்விட்டது. யார் அதைச் செய்தார்கள்?
நாங்கள் அவர்களைத் தேடுகிறோம். தற்போது இந்தக் கணக்கில் பரிவர்த்தனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் கணக்கின் தற்போதைய இருப்பு ரூ. 43 மில்லியன். அவர்களை யார் இடைநிறுத்தினர் என்பதை நாங்கள் தேடுகிறோம்.
சம்பந்தப்பட்ட நபர்கள் செயலாளர் கல்யாணி திசாநாயக்க மற்றும் பொருளாளர் நிரோஷா ஜீவனி. தற்போது இந்தக் கணக்கில் 88 முறை ரூ. 82 மில்லியன், 98 மில்லியன், 88 இலட்சம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
மேலும் 129 முறை ரூ. 39 மில்லியன், 15 ஆயிரத்து 656 இலட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த வங்கியில் சிரிலியவின் பெயரில் ரூ. 100 இலட்சம் நிலையான வைப்புத் தொகையும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்குகள் தொடர்பாக காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இது தற்போது சட்டமா அதிபர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆணை தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நாட்டிற்குச் சொல்கிறோம்” என கூறியிருந்தார்.
வசீம் தாஜுதீன் கொலை
இந்த பின்னணியில் வசிம் தாஜுதீன் கொலையில் சிரிலிய சவியா மீதும் கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டன.

இந்தக் கொலை தொடர்பாக, சிரிலிய சவிய அறக்கட்டளைக்குச் சொந்தமான WPKA 0642 என்ற பதிவு எண்ணைக் கொண்ட வெள்ளை நிற டிஃபென்டர் வாகனம், வாசிம் தாஜுதீன் கொலையில் பயன்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை செப்டம்பர் 22, 2018 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.
இந்த டிஃபென்டர் வாகனம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கிளையால் சிரிலிய சவியாவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. பின்னர், வாகனம் நிறம் மாறிய பின்னர் அனுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விசாரணைகள் நல்லாட்சி காலத்தில் நடந்தன, ஆனால் பின்னர் வந்த ராஜபக்சக்கள் புலனாய்வாளர்களை சிறையில் அடைத்து விசாரணை கோப்புகளை காணாமல் போகச் செய்தனர் என தற்போதைய அரசாங்கம் கூறியுள்ளது.
இப்போது, அந்த விசாரணைகள் மீண்டும் ஆராயப்படுகின்றன. இதற்கிடையில், சமீபத்தில் துபாயில் இருந்து கைது செய்யப்பட்டு தீவுக்கு அழைத்து வரப்பட்ட ஒரு திட்டமிட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், நாமல் ராஜபக்சவை வாக்குமூலம் பதிவு செய்ய வருமாறு சி.ஐ.டி தெரிவித்திருந்தது.
ஆனால் அந்த தினத்தில் அவர் இலங்கையில் , இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததால், அவர் வருவதற்கு வேறு திகதி வழங்குமாறு கோரியிருந்தனர்.
இதன்படி யோஷித மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நாமல் மீதும் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சிரிலிய கணக்கு தொடர்பான ஒரு விசாரணை நடக்கவுள்ள பின்னணியில் , 'இன்று என்னால் வர முடியாது, எனக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் கொடுங்கள்' என்று ஷிரந்தியும் வேறு எதுவும் சொல்லவில்லை.
பிணை திட்டம்
எனவே நடந்த ஊழல் பற்றி அவளுக்குத் தெரியும் என்பதால், இரண்டு வாரங்களுக்குள் அவர் ஏதாவது ஒரு வகையான பிணையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கின்றாரா என்ற சமூக கேள்வியும் எழுகிறது.

இல்லை என்றால் தென்னிலங்கையின் முன்னணி ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதன்படி வெளிநாட்டு தலையீடுகள் இதில் உள்ளனவா என்ற கேள்வி இருக்க வேண்டும்.
எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான திட்டங்களுக்கு இடமில்லை என்பதை ராஜபக்சர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கத்தின் கருத்தியல்கள் காணப்படுகிறன.
ஏனென்றால், வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், தனக்குக் கிடைத்த மக்கள் வாக்குகளை நன்கு அறிந்திருப்பதாகவும், பொது வாக்குகளில் திருடர்கள், மோசடி செய்பவர்கள் மற்றும் கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்குவதும் அடங்கும் என்றும், அரசாங்கத்திற்கு மக்களின் அபிலாஷைகளை விட பெரிய லட்சியம் இருப்பதாகவும் மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக உறுதிப்பட கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |