வடக்கு பிரதம செயலாளர் உள்ளிட்ட பலருக்கு கொரோனா
வடமாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதனை அடுத்தே சுகாதார பிரிவினர் அவருடன் பழகியவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர். இதேவேளை வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதனின் பிரியாவிடை வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
அதில் தற்போதைய பிரதம செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் நிர்வாக தேவைகள் நிமித்தம் வடமாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள் , திணைக்கள அதிகாரிகள் பலரும் பிரதம செயலாளருடன் தொடர்பினை கொண்டு இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.