சிலாபம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப் பொதிகளால் பரபரப்பு
navy
chilaw
packs
By Sumithiran
சிலாபம் கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கிய மர்மப் பொதிகளால் பரபரப்பான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஸ்ரீலங்கா கடற்படையினர் குறித்த பொதிகளை பிரித்து பார்த்தவேளை அவை கஞ்சா பொதிகள் என தெரியவந்தது. இந்தப்பொதிகள் இந்தியாவிலிருந்து கடத்தல்காரர்களால் அனுப்பிவைக்கப்பட்டதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொதிகளில் 23 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்ததாக ஸ்ரீலங்கா கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை. குறித்த பகுதியில் மாத்திரம் கடந்த 5 தினங்களில் 303 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி