இலங்கையில் தகாதமுறைக்குட்படுத்தப்படும் சிறுவர்கள் : அதிகரித்துள்ள முறைபாடுகள்
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான தகாததுறைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 290 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க (Udaya Kumara Amarasinghe) குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மாதாந்தம் இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் மற்றும் சிறுவர்கள் தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு (Colombo) மாவட்டத்தில் இருந்து பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்பான முறைப்பாடு
இந்தநிலையில், குழந்தைகள் தொடர்பான முறைப்பாடுகளில் இரண்டாவது அதிகளவான முறைப்பாடுகள் கம்பஹாவிலிருந்தும் (Gampaha) மற்றும் மூன்றாவது அதிகளவான முறைகள் குருநாகலிலிருந்தும் (Kurunegala) வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலம், சமீபத்தில் இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவர் தனது மகள் தகாத முறைக்குட்படுத்தப்பட்டதை ஊடகங்களில் தெரிவித்திருந்த போது, அது குறித்து கேட்ட போது அவர் இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |