வடக்கில் பதிவாகும் வன்புணர்வு சம்பவங்கள்! வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் பதிவான பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் 70 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சம்மதத்துடனேயே இடம்பெற்றுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக காவல்துறை திணைக்களத்திடம் கோரப்பட்ட தகவல்கள், வடக்கு மாகாண மூத்த பிரதிப் காவல்துறைமா அதிபர் மகிந்த குணரத்னவால் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
143 சந்தேகநபர்கள் கைது
வடக்கு மாகாணத்தில் தவறான நடத்தைகள் தொடர்பில் 131 காவல்துறை முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 90 சம்பவங்கள் சிறுமிகளின் இணக்கத்துடன் இடம்பெற்றுள்ளதுடன் 33 சம்பவங்கள் மாத்திரமே அவர்களின் இணக்கமில்லாது நடந்துள்ளன.
மேலும், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 143 சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |