இலங்கை மருத்துவமனையில் நடந்த பதறவைக்கும் சம்பவம்

Colombo Sri Lanka Police Investigation Sonnalum Kuttram
By Vanan Jul 31, 2023 07:53 AM GMT
Report

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பிலும், மருத்துவர்களின் செயற்பாடு தொடர்பிலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கின்றன.

சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தமது தரப்பில் தவறு நடந்ததை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

நடந்தது என்ன? 

இலங்கை மருத்துவமனையில் நடந்த பதறவைக்கும் சம்பவம் | Child Death Lady Ridgeway Shocking Evidence

கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயதான ஹம்தி எனும் சிறுவன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சிறுநீர் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அச்சிறுவனை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பரிசோதித்தபோது, சிறுவனின் இடது சிறுநீரகத்தில் இருந்த குறைபாடு காரணமாக அவனது இடது சிறுநீரகத்தை நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

சத்திர சிகிச்சைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் இடது பக்க சிறுநீரகம் 9 வீதமும் வலது பக்க சிறுநீரகம் 91 வீதமும் செயற்பாட்டில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


செயலிழந்து இருக்கும் இடது பக்க சிறுநீரகத்தை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை கடந்த வருடம், (24.12.2022) அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சத்திர சிகிச்சையை மருத்துவர் மலிக் சமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் மருத்துவர் நவீன் விஜயகோன் மேற்கொண்டுள்ளார்.

இந்த சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவனுக்கு சிறுநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட சிரமத்தைத் தொடர்ந்து மீண்டும் ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவகாரத்தை வெளியே கசிய விட வேண்டாம்

இலங்கை மருத்துவமனையில் நடந்த பதறவைக்கும் சம்பவம் | Child Death Lady Ridgeway Shocking Evidence

அந்த ஸ்கான் பரிசோதனையில் இரண்டு சிறுசீரகங்களும் அகற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதன் பின்னர், சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தமது தரப்பில் தவறு நடந்ததை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதாவது பாதிக்கப்பட்டிருந்த இடது பக்க சிறுநீரகத்துடன் வலது பக்க சிறுநீரகமும் தவறுதலாக அகற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சிறுவனுக்கு எப்படியாவது சிறுநீரகம் ஒன்றை பொருத்தி அவனை குணப்படுத்துவதாக அந்த மருத்துவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர். இயந்திரத்தின் உதவியுடன் கடுமையான வலிகளுடன் சிறுவன் கடந்த ஏழு மாதங்களை கடத்தியுள்ளார்.

எனினும் இந்த விவகாரத்தை வெளியே கசிய விட வேண்டாம், தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று மருத்துவர்கள் வழங்கிய வாக்குறுதியை ஹம்தியின் பெற்றோர் முழுமையாக நம்பியிருந்துள்ளனர்.

அதன் பிரகாரம் அவர்கள் மருத்துவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். நாட்கள் செல்ல செல்ல மருத்துவர்கள் வழங்கியது வெறும் பொய் வாக்குறுதிகள் என்பது தெரிய வந்தது.

அந்தச் சிறுவன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். மருத்துவர்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் செய்வதறியாது தவித்தனர்.

இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை மாலை சிறுவன் ஹம்தி உயிரிழந்தார்.

ஒரு வாரகாலமாக “கோமா” நிலையிலிருந்த சிறுவன், விஷக் கிருமி உடலில் புகுந்ததால் ஏற்பட்ட மரணம் என வழமையாக விடுக்கும் அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை பணிப்பாளர்  வழங்கிய நேர்காணல்

இலங்கை மருத்துவமனையில் நடந்த பதறவைக்கும் சம்பவம் | Child Death Lady Ridgeway Shocking Evidence

மருத்துவமனை பணிப்பாளர், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் சிறுவனின் சிறுநீரகங்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு சிறுநீரகங்களும் வெவ்வேறாக இல்லாமல் அதன் கீழ் பகுதிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் நிலை Horseshoe என்று அழைக்கப்படுகிறது.

மருத்துவமனை பணிப்பாளர் கூறுவது போன்ற அமைப்பில் சிறுவனின் சிறுநீரகங்கள் இருக்கவில்லை என்பதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ பரிசோதனை அறிக்கைள் சான்றுகளாக இருக்கின்றன.

அவ்வாறு சிறுநீரகங்கள் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்து அவை அகற்றப்பட்டிருந்தால், சத்திர சிகிச்சையின் பின்னர் மருத்துவ (Histopathology) பரிசோதனைக்கு இடது பக்க சிறுநீரகம் மட்டும் ஏன் அனுப்பப்பட்டது என்பதற்கான விளக்கத்தை மருத்துவமனையின் பணிப்பாளர் தெளிவு படுத்த வேண்டுமென சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த 25ம் திகதி டிசம்பர் மாதம் 2022 அன்று எடுக்கப்பட்ட குறித்த பெத்தொலொஜி அறிக்கையில் சிறுவனின் அகற்றப்பட்ட இடது சிறுநீரகம் பற்றிய தகவல்கள் மட்டுமே இருக்கின்றன.

வலது பக்க சிறுநீரகம் தொடர்பான எந்த தகவல்களும் அந்த மருத்துவ அறிக்கையில் இல்லை.

அப்படி இரண்டு சிறுநீரகங்கள் ஒன்றாக இணைந்திருந்து சத்திரசிகிச்சையின் போது தவறுதலாகவோ, தவிர்க்க முடியாமலோ அகற்றப்பட்டிருந்தால் அது பற்றி மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அப்படியான குறிப்புகள் ஏதும் அவற்றில் இல்லை.

சடலத்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல்

இலங்கை மருத்துவமனையில் நடந்த பதறவைக்கும் சம்பவம் | Child Death Lady Ridgeway Shocking Evidence

இந்நிலையில் சிறுவனின் சடலத்தை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பொரளை காவல் நிலையப் பொறுப்பதிகாரி, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைப் பணிப்பாளர் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று மாலை சிறுவனின் ஜனாசா விடுவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, மருத்துவக் கவுன்சில், சுகாதார அமைச்சு ஆகியவற்றில் முறைப்பாடுகளை மேற்கொள்ளப்படவுள்ளது.

சிறுவனின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று இறுதி கிரிகைகள் இடம்பெற்றன.

மாளிகாவத்தை மையவாடியில் நடைபெற்ற இந்த இறுதிக் கிரியைகளில் ஏராளமான பொதுமக்கள்,அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மேற்கு, Burgdorf, Switzerland

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

12 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, மலேசியா, Malaysia

09 Sep, 2019
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, Toronto, Canada

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016