ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் தொடர்பில் குடும்ப சுகாதார பணியகம் விடுத்த அதிர்ச்சி தகவல்
ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில் மந்தபோசாக்கு 15 வீதமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் குடும்ப பணியகம் தெரிவித்துள்ளது.
2022 ஒக்டோபரில் சிறுவர்களின் மானுடவியல் அளவீடுகளின் அடிப்படையில் குடும்ப சுகாதார பணியகம் தயாரித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக குடும்ப சுகாதார பணியகத்தின் மருத்துவர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்போது ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில் மந்தபோசாக்கு15 வீதமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஊட்டச்சத்தின்மை அதிகரிப்பு

மேலும் குறித்த அறிக்கையில்,
“ஐந்து வயதிற்கு உட்பட்ட 95 வீதமான சிறுவர்களின் நிலையை நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். இது ஒரு சாதனை. இதன்போது 15 வீதமான சிறுவர்கள் எதிர்பார்க்கப்படும் எடையை விட குறைவான எடையை கொண்டிருந்தனர்.
2021ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்தின்மை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.அதேவேளை அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றில் சிறிது குறைவு காணப்படுகின்றது.
இதேவேளை பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் கிளிநொச்சியின் ஊட்டச்சத்து நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் ஆராயவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளது.