டில்லியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! தொடரும் மீட்புப் பணிகள்
இந்தியாவில் டில்லியில் உள்ள கேஷ்பூர் பகுதியில் காணப்படும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் கூற்றுப்படி, குறித்த குழந்தையானது இன்று (10) காலையில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
டில்லியில் கேஷ்பூர் மண்டி பகுதியில் உள்ள டில்லி ஜல் போர்டு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சுமார் 40-50 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள்ளேயே குழந்தை தவறி விழுந்துள்ளது.
மீட்புப்பணிகள் தீவிரம்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த டில்லி தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் டில்லி காவல்துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மீட்புப்பணியில் முதற்கட்டமாக ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்த இடத்துக்கு இணையாக மற்றொரு பள்ளத்தைத் தோண்டி மீட்புப் பணியை தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் குழந்தை தொடர்பான எந்த விடயங்களும் இது வரை காவல்துறையினர் தெரிவிக்காமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |