சிரியாவில் மீட்கப்பட்ட அதிசய குழந்தை - உலகம் முழுதும் ஆயிரக்கணக்கான தத்தெடுப்பு கோரிக்கைகள்
வடமேற்கு சிரியாவில் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி தாயால் பிரசவிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் கோரிக்கை விடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுமிக்கு 'அதிசயம்' என்று பொருள்படும் வகையில் அந்நாட்டு மொழிக்கமைய 'ஆயா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Amid the death and destruction a newborn baby survives, still attached to her dead mother by her umbilical cord. A tragedy and yet a miracle.
— robin furth (@robinfurth) February 10, 2023
Baby born in rubble of Syria earthquake is named Aya and has new guardian https://t.co/uLau2Wiz3q
சிறுமியின் தாய், தந்தை மற்றும் நான்கு உடன்பிறப்புகள் நிலநடுக்கத்தில் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடல்நிலையில் முன்னேற்றம்
நிலநடுக்கத்தால் கீறல்கள், காயங்கள் மற்றும் கடும் குளிரினால் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட குறித்த குழந்தை வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தையை தத்தெடுக்க சமூக வலைதளங்கள் மூலமாகவும், அந்தந்த மருத்துவமனைக்கும் ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளனதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், உறவினர் ஒருவர் வரும் வரை சிறுமியை பராமரிக்கும் பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக வைத்தியசாலை முகாமையாளர் குறித்த செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
