தந்தையின் வாகன சில்லில் சிக்கிய குழந்தைக்கு நேர்ந்த துயரம்
தந்தையின் லொறியின் சில்லில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலியான துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து பலாங்கொடை (Balangoda) காவல்துறை பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குழந்தை, பலாங்கொடை, தெப்பலமுல்ல பகுதியைச் சேர்ந்த லொறி ஓட்டுநரின் மகன் ஆவார்.
தந்தை கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று பின்னோக்கி இயக்கப்பட்டபோது, வீட்டில் இருந்த ஒரு வயது ஏழு மாதக் குழந்தை லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி உள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய 39 வயதான குழந்தையின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்