ஈரானிய முக்கிய புள்ளிகளுக்கு அமெரிக்காவின் பேரிடி!
ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மோமேனி உள்ளிட்டவர்களுக்கு அமெரிக்கா தடைகள் விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாதம் ஈரானில் நடந்த போராட்டங்களை வன்முறையாக அடக்கியதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததற்கு மோமேனி பொறுப்பானவர் என அமெரிக்க நிதியமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டிஜிட்டல் நாணய பரிவர்த்தனை
மேலும், போராட்டங்களை ஒடுக்கியதாக கூறப்படும் ஐந்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஈரான் அரசுக்கு பணம் சுத்திகரிக்க உதவியதாக கூறப்படும் முதலீட்டாளர் பாபக் ஸன்ஜானி மற்றும் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட இரண்டு டிஜிட்டல் நாணய நிறுவனங்களும் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
அமெரிக்காவின் எச்சரிக்கை
இந்த நிறுவனங்கள் IRGC-க்கு தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை கையாண்டுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

Image Credit: The Washington Post
அத்துடன், ஈரான் தடைகளை தவிர்க்க டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அமெரிக்கா தொடர்ந்தும் எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |