அமெரிக்க அழுத்தத்திற்கு எதிராக தவறிப் போன ஈரானின் யுக்தி
மத்திய கிழக்கில் ஒரு புதிய மோதலில் இருந்து ஈரானையும் அமெரிக்காவையும் விலக்கி வைக்க துருக்கி மற்றும் முக்கிய அரபு வளைகுடா நாடுகள் கூட்டு முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள்வதில் ஈரான் ஒரு யுக்தியைக் கொண்டிருந்ததாகவும் இந்த யுக்தி பின் நாட்களில் சரிந்தது என்றும் கூறப்படுகிறது.
ஈரானின் செய்திகளும் அமெரிக்காவின் "போர் பற்றிய சொல்லாட்சிகளும்" இராஜதந்திர வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர்
இந்நிலையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அரக்சியின் கருத்துக்கள் ஈரானின் பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டிப்படுகிறது.
துருக்கிய மற்றும் அரபு நாடுகள் அதைச் சாத்தியமாக்க முயற்சிக்கின்றன, ஆனால் இறுதியில், அது ஈரானியர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள விரும்புவதைப் பொறுத்தது என்று மத்தியக் கிழக்கின் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
இதன் பின்னணியில் அமெரிக்காவை சமாதானப்படுத்துவது மட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய இராஜதந்திரத்தில் ஈரானுக்கு ஒரு வாய்ப்பை வழங்க பிராந்தியத்தை நம்ப வைப்பதையும் சார்ந்துள்ளது எனவும் எதிர்வுகூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |