கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்த மிரட்டல்! விமானங்களுக்கு 50 வீத வரி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவில் தயாரிக்கப்பட்ட சில விமானங்களுக்கு 50 வீத வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் Gulfstream நிறுவனத்தின் சான்றிதழ் விதிமுறைகளை பின்பற்றவில்லை என கனடிய விமானங்களை குற்றஞ்சாட்டி இந்த வரி விதிப்பு எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்துள்ளார்.
கடுமையான வரி
அதன்போது, “அமெரிக்க நிறுவனங்களுக்கு போட்டியாக கனடா விமானங்களை விற்பனை செய்ய முயன்றால், கடுமையான வரி விதிக்கப்படும்.நாங்கள் எங்கள் தொழில்துறையை பாதுகாப்போம்.”என அவர் கூறியுள்ளார்.

Image Credit: PBS
இந்த அறிவிப்பு அமெரிக்கா-கனடா வணிக உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இரு நாடுகளும் விமான உற்பத்தி மற்றும் வணிகத் துறையில் முக்கிய பங்காளிகள் என்பதால், நிபுணர்கள் இதனால் சந்தை நிலைமைகள் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.
கனடாவின் பதில்
கனடா அரசு, இந்த எச்சரிக்கை நியாயமற்றது எனக் கூறி, “கனடாவில் தயாரிக்கப்படும் விமானங்கள் அனைத்தும் சர்வதேச தரநிலைகளுக்கு உட்பட்டவை” என்று தெரிவித்துள்ளது.

Image Credit: Investing.com
இந்நிலையில், குறித்த வரி நடைமுறைப்படுத்தப்பட்டால், விமான விலை அதிகரிக்கும், வர்த்தக உறவுகள் பாதிக்கப்படும், மேலும் வேலைவாய்ப்புகள் குறையும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |