பாடசாலை மாணவர்களே இலக்கு -சிக்கிய சூத்திரதாரி
STF
Colombo
By Sumithiran
பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப் பொருட்களை விற்பனை செய்த ஒருவர் கொழும்பு மோட்டார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபருடன், கஞ்சா கலந்த 25 போதைப்பொருள், 202 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 20,500.00 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படை தலைமையக முகாமில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட அதிரடி சோதனை பிரிவு (கொழும்பு வலயம்) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15, அளுத் மாவத்தை வீதியில் வசிக்கும் 47 வயதுடையவராவார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி