கனடாவிலுள்ள பழங்குடியின பாடசாலையில் 215 குழந்தைகளின் எச்சம் மீட்பு!

Canada People Skeletons of Children
By Chanakyan May 31, 2021 10:55 AM GMT
Report

கனடாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிசு கொலம்பியா இந்த வாரம் 215 குழந்தைகளின் எச்சங்கள் பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பாடசாலையின் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கம்லூப்ஸ் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று கடந்த காலத்தில் செயல்பட்டு வந்தது. அதன் வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இந்த பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தது. 1890ஆம் ஆண்டு தொடக்கம் 1969ஆம் ஆண்டு வரை பள்ளிக்கூடத்தை தேவாலயம் நடத்தியது. பின்னர் அரசு அந்தப்பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தது. 1978இல் பள்ளிக்கூடம் மூடப்பட்டது.

பாடசாலையில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது இன அழிப்பின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னதாக அங்கு பூர்வகுடி மக்கள் வசித்து வந்தனர். அவர்களில் லட்சக்கணக்கான மக்களை கொன்று விட்டு தான் ஐரோப்பியர்கள் தங்கள் இருப்பிடத்தை உருவாக்கினார்கள். 

பிற்காலத்தில் இவ்வாறு இனப்படுகொலை செய்வது நின்றது. ஆனால் பழங்குடி மக்கள் பிற்காலத்தில் ஒன்றாக சேர்ந்து பிரச்சினை செய்துவிடக்கூடாது என்பதற்காக பழங்குடிமக்கள் குழந்தை பெற்றதுமே பெற்றோரிடமிருந்து அந்த குழந்தையை பிரித்துக் கொண்டு வந்தனர்.

இதற்கு பிறகு பெற்றோர்கள் குழந்தைகளை பார்க்கவே முடியாது. குழந்தைகள் வளர்ந்தற்குப் பிறகு பெற்றோருக்கு அடையாளம் தெரியாது. இவ்வாறு பிரிக்கப்பட்ட குழந்தைகளை விடுதியுடன் கூடிய பள்ளிகளில் தங்க வைத்து படிக்க வைத்தனர். அவர்களை சரியாக பராமரிப்பது கிடையாது. போதிய உணவு கொடுப்பது கிடையாது. நோய் வந்தாலும் கவனிப்பது கிடையாது. இஷ்டத்திற்கு கொடுமைப்படுத்தினார்கள்.

இதன் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்தனர். அவ்வாறு இறந்த குழந்தைகள் உடல்களை பள்ளி வளாகத்திலேயே புதைத்தார்கள். இப்படித்தான் கனடா பள்ளியிலும் பழங் குடிமக்களின் குழந்தைகளை புதைத்ததாக கருதப்படுகிறது. இப்போது 215 குழந்தைகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இப்போதும் கனடாவில் பழங்குடி மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் கனடா முழுவதும் இந்த குழந்தைகளுக்காக விசே‌ஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இது சம்பந்தமாக பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மேரி எலன் தெரிவிக்கையில்,

‘‘இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக ஐ.நா. சபை ஒரு அமைப்பை உருவாக்கி அதன்மூலம் விசாரணை நடக்க வேண்டும்.

இதில் சர்வதேச பங்களிப்பும் இருக்க வேண்டும். மேலும் கனடா அரசு சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விசாரணை சர்வதேசத் தரத்தில் அமைய வேண்டும். அதே நேரத்தில் விசாரணை என்ற பெயரில் பழங்குடி மக்களை துன்புறுத்தக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

அந்த காலத்தில் இது போன்ற பள்ளிகள் பல இடங்களிலும் செயல்பட்டன. அந்த பாடசாலைகளிலும் குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம். எனவே அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக கூறி இருக்கிறார்கள்.

அனைத்து பள்ளிகூடத்திலும் உள்ள ஆவணங்களில் இது சம்பந்தமான தகவல்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025