இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக கடத்தப்படும் சிறுவர்கள்: வெளியான பகீர் தகவல்கள்
இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக பிற நாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளதையடுத்து குடிவரவுத் திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் அவசர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று (27) காலை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணைகளில் இந் நாட்டில் இருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்களை கடத்தியதில் இடைத்தரகர்கள் மற்றும் கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 75 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
விசாரணகள்
அத்தோடு, நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13 என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்