இதுவரை தீர்மானிக்கவில்லை - அரசாங்கம் வெளியிட்ட தகவல்
இலங்கையில் 12 வயதுக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்தை செலுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகளில் 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுவது, உகந்த ஒன்றாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை என கொவிட் 19 தொற்று கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாள்பட்ட நோய்கள் மற்றும் குறைபாடுகள் உடைய 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுவது குறித்து தொழில்நுட்ப குழு முடிவு செய்யவுள்ளதாக கூறிய அவர், இது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து உரிய பரிந்துரைகளை தொழில்நுட்ப குழு முன்வைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.