மூளை முடக்கத்தால் பெருமளவவில் பாதிக்கப்படும் குழந்தைகள்! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்
தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம்மை (Mohammad Bahim) மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் ம் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐ.நா குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குந்தூஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக பலியாகியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் இந்த குண்டுவெடிப்பால் வேறு மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தினமும் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் (Mohammad Bahim) கூறுகிறார்.
பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போர் குறித்து விளக்கிய யுனிசெப், ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் இவ்வளவு குழந்தைகள் குண்டுவெடிப்பில் பலியானது கவலை அளிப்பதாக யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.
வறுமை, உணவுப் பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெப் கவலை வெளியிட்டுள்ளது.