சீனாவில் இடம்பெற்ற கோரவிபத்து - 17 பேர் பரிதாபகரமாக பலி!
China
Accident
By Pakirathan
சீனாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் பகுதியில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை பலர் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி அதிகாலை 1 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சீனா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்துக்கான காரணம்
இறுதி ஊர்வலமொன்றின் மீது கனரக வாகனமொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பனிமூட்ட நிலைமை காரணமாக வீதி தெளிவற்று காணப்பட்டதன் விளைவாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்