சஜித்திற்கு ஆதரவு வழங்கிய சீனா! நேரில் சென்று சந்தித்த தூதுவர் கீ.சென் ஹோங் (படங்கள்)

People Sajith Premadasa SJB Chine SriLanka K. Sen Hong Kidney Dialysis Machine
By Chanakyan Dec 22, 2021 10:00 AM GMT
Report

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளின் சுகாதார நலன்களை மேம்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) எண்ணக்கருவின் பிரகாரம் அமைந்த ‘ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் கீ.சென்ஹோங் (K. Sen Hong) நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ.சென்ஹோங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் சந்தித்துள்ளனர்.

அத்துடன் சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான பரிசோதனைக்கு அத்தியாவசியமான சிறு நீரக டயலிசிஸ் (Kidney Dialysis Machine) இயந்திரத்திற்காக சீன அரசாங்கம் நூற்று தொண்ணூற்று ஆறு இலட்சம் ரூபா பெருமதியான நிதியுதவியை வழங்கியுள்ளனர்.

இது முழுக்க முழுக்க கடனாக இல்லாது நன்கொடையாகவே வழங்கப்பட்டது.

தமது நாட்டுப் பிரஜைகளுக்காக கடனுக்குப் பதிலாக நன்கொடைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையே சீனத்தூவரிடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

இதன்போது சீனத் தூதுவர் கீ.சென்ஹோங் கருத்துத் தெரிவிக்கையில், 

இத்திட்டத்தின் வெளிப்படைத் தன்மையால் தாம் ஈர்க்கப்பட்டதாகவும் இதனாலயே குறித்த நன்கொடையை வழங்குகின்றோம். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் 'ஜன சுவய' திட்டத்தின் கீழ் “சத்காரய” நிகழ்ச்சித் திட்டங்கள் இது வரை 34 கட்டங்கள் வரை இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த செயற்பாடுகள் முறையாகவும் உகந்ததாகவும் முன்னெடுக்கப்படுவதை தாம் அவதானித்துள்ளோம்.

சீன அரசாங்கம் இது தொடர்பில் அவதானம் செலுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி இந்த நன்கொடையை வழங்க தீர்மானித்திருந்தது.

இந்நாட்டு மக்களின் நலனுக்காகவும், சுகாதார மேம்பாட்டிற்காகவும் சீனா ஆற்றிவரும் இந்த பங்களிப்புக்கு இலங்கை சார்பில் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார். 

ஒரு சம்பிரதாய எதிர்க்கட்சியின் வகிபாகத்தில் இருந்து விலகி நாட்டிற்கு பெறுமானம் சேர்க்கும் இராஜதந்திர அர்ப்பணிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு எடுத்துக்காட்டு.

வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சியும் மேற்கொள்ளாத பல அபிவிருத்திப் பணிகளை அதிகாரம் இல்லாவிட்டாலும் தமது கட்சியால் முன்னெடுக்க முடிந்ததாகவும் இது அரசியலுக்கு பதிலாக தேசத்திற்கான சேவையையே தான் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சஜித்திற்கு ஆதரவு வழங்கிய சீனா! நேரில் சென்று சந்தித்த தூதுவர் கீ.சென் ஹோங் (படங்கள்) | China Backed Sajith


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026