"சீனா வழங்கிய பரிசு" ட்ரம்பின் கூற்றுக்கு வழங்கப்பட்ட பதிலடி!
ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் இடைமறித்த விவகாரத்தில், அது "சீனா வழங்கிய பரிசு" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த குற்றச்சாட்டைச் சீன வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டு உண்மைகளுக்குப் புறம்பானது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாகத் தொடர வேண்டும் என்பதையும் அவர் அதன்போது வலியுறுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்
ஈரானியத் துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா ஒரு வாரத்திற்கும் மேலாகக் கடற்படை முற்றுகையை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, ஈரான் அந்த நீரிணையை மூடியுள்ளதோடு, வர்த்தகக் கப்பல்களைக் கைப்பற்றி, வளைகுடா பிராந்தியத்தின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்குவதாக எச்சரித்துள்ளது.
இவ்வாறானதொருபின்னணியில், தற்போதைய இந்த மோதல் போக்கு சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |