கிழக்கு லடாக் எல்லையில் படைக்குவிப்பில் சீனா -அதிகரித்துள்ள போர்ப்பதற்றம்
india
china
army
tension
By Sumithiran
கிழக்கு லடாக்கில் போர் மூளும் சூழல் காணப்படுவதாக சீனா எல்லையை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த கவுன்சில் கொன்சக் ஸ்டாரிஜின் தெரிவித்துள்ளார்.
சீனாவின் படைக்குவிப்புகள் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இப்படிப்பட்ட பதற்றமான நிலை நீடிப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியா சீனா இடையே படைக்குறைப்பு தொடர்பாக இராணுவ தளபதிகள் மட்டத்தில் நடைபெற்ற 13 வது சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க சீனாவும் இந்தியாவும் ஒப்புதல் அளித்துள்ளன.விரைவில் 14வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திகதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.