குழந்தை பெற்றுகொண்டால் 12 லட்சம்: அறிவித்த பிரபல நாடு
சீனாவில் (China) குழந்தைகளை பெற்றுக்கொண்டால் ரூபாய் 12 லட்சம் நிதியுதவி வழக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தை பிறப்பு விகிதம் குறைவு காரணமாக, மக்கள் தொகை சரிவு உலகளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
மக்கள் தொகையில் உலகளவில் முதலிடத்தில் இருந்த சீனாவும், இந்த பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை திட்டம்
இதன் காரணமாக தனது ஒரு குழந்தை திட்டத்தை சீனா பத்து ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டு விட்டது.
இருந்தும், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
உற்பத்தி துறையில் உலகின் முன்னணி நாடாக விளங்கி வரும் சீனாவுக்கு, இது முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது.
பிறக்கும் குழந்தை
இதன் காரணமாக, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு சீனா நிதியுதவி வழங்கி வருகின்றது.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு சீன அரசு சார்பில், மூன்று வயது வரை ஆண்டுதோறும் 3500 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,000) வழங்கப்படும் என அறிவித்தது.
இந்தநிலையில் ஹோஹாட் பகுதியில் இரண்டாவது குழந்தைக்கு 50,000 யுவானும், மூன்றாவது குழந்தைக்கு ஒரு இலட்சம் யுவானும் (இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம்) வழங்கப்படுகின்றது.
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், இதே போன்ற திட்டத்தைசெயல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
