சனத்தொகையை அதிகரிக்க சீனாவின் அதிரடி திட்டம் : குறைகிறது திருமண வயது
China
By Sumithiran
சீனாவில்(china) தற்போது சனத்தொகையின் அளவு வேகமாக குறைந்து வருகிறது.ஒரு குழந்தை திட்டத்தை கைவிட்ட சீனா குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
சீனாவில் இளைஞர்களிடையே திருமணத்தில் நாட்டமின்மையும் குழந்தை பிறப்பு வீதம் குறைவடைய காரணமென தெரிவிக்கப்படுகிறது.
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் திட்டம்
இந்த நிலையில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக திருமண வயதை 18ஆக குறைக்க சீன அரசு தீர்மானித்துள்ளது.
தற்போது ஆண்களின் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ள நிலையில், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி