இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்துள்ளதா..! ஜெய்சங்கர் அளித்த பதில்
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் தற்போது நிலவும் பதற்றம், இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்ததால் ஏற்படவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் ஒன்பது ஆண்டுகள் நிறைவையொட்டி வெளியுறவு அமைச்சகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "நாடுகளின் துருப்புகள் பொதுவாக LAC க்கு (அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில்) மிக அருகில் நிறுத்தப்படுவதில்லை. வீரர்கள் தங்கள் முகாம்களில் நிறுத்தப்படுகிறார்கள்.
நிலவும் பதற்றம்
அங்கிருந்து அவர்கள் முன்னேறிச்செல்வார்கள். 2020ஆ ஆண்டுக்குப் பிறகு வந்துள்ள மாற்றம் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலிருந்தும் ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இரு நாடுகளுமே தங்கள் படைகளை எல்லைக்கு அருகில் நிறுத்தியுள்ளன. "இந்தப் பிரச்னையை நாம் தீர்க்க வேண்டும். இந்தப் பிரச்னை நிலம் பற்றியது அல்ல. இது ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட் பற்றியது. என்றார்.
மேலும், இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது குறித்து வெளியுறவு அமைச்சரிடம் மற்றுமொரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “பாங்கோங் சாவ்வில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கூறுகிறார். 1962ஆம் ஆண்டு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில்தான் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்திய கைப்பற்றிய சீனா
“அருணாச்சல பிரதேசத்தில் ’மாதிரி கிராமம்’ கட்டப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் நாடாளுமன்ற பதிவேடுகளைப் பார்த்தால் 1959இல் சீனா ஆக்கிரமித்த இடத்தில் இது அமைந்திருப்பது தெரிகிறது.
1950களிலேயே இந்தியாவின் நிலத்தை சீனா கைப்பற்றிவிட்டது," அடிப்படை பிரச்சினை என்னவென்றால் அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நமது ராணுவம் பொதுவாக முகாமில் இருந்து ரோந்து சென்று பின்னர் முகாமுக்குத் திரும்பும். இது 2020 முதல் மாறிவிட்டது.
ஏனெனில் சீனா ஒப்பந்தங்களை மீறியது மற்றும் எல்லைக்கு அருகே அதிக எண்ணிக்கையிலான துருப்புகளை நிறுத்தியது. இதைத்தொடந்து நாமும் ஃபார்வேர்ட் டிப்ளாய்மெண்ட் செய்ய வேண்டியிருந்தது. இது பதற்றத்தை உருவாக்கியது,” என்று ஜெய்சங்கர் கூறினார்.
