விடுதலை புலிகளின் காலத்தில் வாலாட்டாத சீனா..!(காணொளி)
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வேற்று நாட்டவர்கள் யாரும் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், சீனாவின் வேகமான ஆக்கிரமிப்பினால் நாளும் பொழுதும் புதுப்புது பிரச்சினைகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
அத்தோடு, இலங்கையை தனது கைகுள் எவ்வாறு கொண்டுவருது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
விடுதலை புலிகள் பலமாக இருக்கும் வரை யாரும் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருந்தது, அம்பாந்தோட்டையில் கண் வைத்தார்கயே ஒழிய திருகோணமலைக்கு யாரும் கண் வைக்கவில்லை.
வைக்க முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இங்கே தளங்கள் அமைத்து முதலீடுகள் செய்து தாங்களும் நுழைய வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கின்றார்கள் என்றார்.