உலகின் அதிவேக சூப்பர் கணினி வரிசையில் சீனா முதலிடம்!
உலகின் மிக அதிவேக சூப்பர் கணினிகளுக்கான சர்வதேசத் தரவரிசையில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் வெளியிடப்பட்ட அரையாண்டு TOP 500 பட்டியலில் சீனாவின் லைன்ஷைன் கணினி உலகின் மிக சக்திவாய்ந்த அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பத் துறையில் உலக வல்லரசான அமெரிக்காவிற்குச் சீனா கடுமையான போட்டியை அளித்து வருவது மீண்டும் உறுதியாகியுள்ளது.
தொழில்நுட்ப முதலீடுகள்
2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீன சூப்பர் கணினி ஒன்று இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.
சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தில் நிறுவப்பட்டுள்ள லைன்ஷைன், வினாடிக்கு 2 குவின்டில்லியன் கணக்கீடுகளைச் செய்யும் திறன் கொண்டது.

இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள எல் கேபிடன் சூப்பர் கணினியை விட 20 சதவீதம் கூடுதல் வேகமுடையதாகும்.
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் சீனா தனது சொந்த உள்நாட்டுத் தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பட்டியலில் அமெரிக்காவின் எல் கேபிடன் மற்றும் ஃபிரண்டியர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 19 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்