மாலைதீவின் தீரா துயரை தீர்த்த சீனா..! திபெத்திலிருந்து நேரடி நீர் விநியோகம்
கடும் குடிநீர் பஞ்சத்தால் அவதிப்படும் மாலைதீவுக்கு திபெத் பனிமலைகளில் இருந்து 1500 தொன் குடிநீரை சீனா அளித்ததாக மாலைத்தீவு அரசு தெரிவித்துள்ளது.
இந்த முடிவு சீனாவின் திபெத் தன்னாட்சி மண்டல தலைவர் யான் ஜின்ஹாய் மற்றும் மாலைத்தீவு அதிபர் டாக்டர் முகமது முயீஸை கடந்த நவம்பரில் சந்தித்த போது எடுக்கப்பட்டதாக மாலைதீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 1500 டொன் குடிநீர் மாலைத்தீவுக்கு வந்து சேர்ந்ததாக எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் குடிநீர் பஞ்சம்
சீனாவுக்கு ஆதரவான அரசு மாலைதீவில் அமைந்தது முதல் சீனா பல்வேறு வகைகளில் மாலைதீவுக்கு உதவி அளித்து வருகிறது.
இந்நிலையில் மார்ச்சில் மாலைதீவு அதிபர் முயீஸ், சீனா அபாயகரமில்லாத ஆயுதங்கள் மற்றும் ஆயுத பயிற்சியை மாலைதீவுக்கு இலவசமாக வழங்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
அத்தோடு 2014 இல் மாலைதீவு குடிநீர் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தின்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் மாலைதீவின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா பல்வேறு தவணைகளில் மாலைதீவுக்கு குடிநீர் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |