அமெரிக்காவால் முற்றுகையிடப்பட்ட ஈரானிய கப்பல்! சீனா வெளியிட்ட அறிக்கை
ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்கா வலுக்கட்டாயமாக வழிமறித்தமை குறித்து சீனா கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பொறுப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் சூழல் உணர்திறன் மிக்கதாகவும் சிக்கலானதாகவும் உள்ளது, என சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
இயல்பான போக்குவரத்து
சம்பந்தப்பட்ட தரப்பினர் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதைத் தவிர்த்து, நீரிணை வழியாக இயல்பான போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான நிலைமைகளை உருவாக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, ஈரானிய துறைமுகங்களுக்கான தனது முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஈரானிய சரக்குக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அக்கப்பலைக் கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்தது.
அக்கப்பல் சீனாவிலிருந்து பயணித்துக் கொண்டிருந்ததாகக் கூறிய ஈரானிய இராணுவம், "அமெரிக்க இராணுவத்தின் ஆயுதமேந்திய கடற்கொள்ளை" என்று அது அழைத்ததற்குப் பதிலடி கொடுக்கும் என்றும் சூளுரைத்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |