காஷ்மீர் பிரச்சினைக்கு போரின் மூலம் தீர்வு காண முடியாது! ஐக்கிய நாடுகள் சபையிடம் நாடும் பாகிஸ்தான்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் நடைபெறுவது இருநாடுகளுக்குமே நல்லதல்ல என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, தெற்காசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம், எனவே காஷ்மீர் பிரச்சினைக்கு போரின் மூலம் தீர்வு காண முடியாது.
அமைதி பேச்சுவார்த்தை
காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலே இந்த பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபை தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெறுவது இரு நாடுகளுக்குமே நல்லதல்ல. ஆகவே இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சீனா பாகிஸ்தான் நட்பு
அதேவேளை, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே அமைக்கப்பட்டிருக்கும் வர்த்தக பாதையானது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

