பெரும் தோல்வியில் முடிந்த சீனாவின் ஆய்வு
சீனாவால் நிலவில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை அவற்றின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
டிஆா்ஓ-ஏ, டிஆா்ஓ-பி ஆகிய அந்த இரு செயற்கைக்கோள்களும் யுயன்ஷெங்-1எஸ் ரொக்கெட் மூலமாக ஷிசாங் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டன.
அதனை தொடர்ந்து, ரொக்கெட்டின் 3-ஆம் நிலை செயல்பாட்டில் தவறு ஏற்பட்டதால் அவற்றை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை என ஷிசாங் ஏவுதள மையம் அறிவித்துள்ளது.
தோல்வி
அதன்படி, வழிதவறிய அந்த இரு செயற்கைக்கோள்களும் பிற செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை தடுப்பதற்காக அவற்றை விண்வெளியிலேயே அழிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விண்வெளி ஆய்வுகளில் பெரும் முன்னேற்றம் கண்டு வரும் சீனாவின் இந்த தோல்வியானது அரிதான பின்னடைவாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |