நாட்டின் எரிபொருள் துறையில் சீனாவின் புதிய நகர்வு
நாட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (27) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
ஒப்பந்தம்
அத்தோடு, சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இது தொடர்பில் தமக்கு அறிவித்ததாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புதிய சுத்திகரிப்பு நிலையம் அம்பாந்தோட்டையில் நிறுவப்படவுள்ளதுடன், அது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுவதற்கு சினோபெக் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
முதலீடு
இந்நிலையில், திட்டத்திற்கான முதலீட்டை அதிகரிக்கவும், சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டு, ஜூன் மாதம் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது மற்றும் முதலீடு 4.5 பில்லியன் டொலர்கள் என்று கூறப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |