இந்தியாவின் பாகிஸ்தான் மீதான் ஒபரேஷன் சிந்தூர்: சீனா உடன் பகிர்ந்த செய்தி..!
பாகிஸ்தான் (Pakistan) மீதான இந்தியாவின் (India) ஒபரேசன் சிந்தூருக்கு பிறகு, அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகள் இரண்டையும் நிதானமாக இருக்குமாறு சீனா (China) வலியுறுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்களைத் தாக்கும் "ஒபரேஷன் சிந்தூர்" என்ற திட்டத்தை இந்தியா இன்று (07) அதிகாலையில் தொடங்கியது.
பாகிஸ்தானின் நெருங்கிய கூட்டாளியான சீனா, இரு நாடுகளுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதுடன், இந்தியாவின் இராணுவ நடவடிக்கைக்கு வருத்தங்களை தெரிவித்துள்ளது.
சீனாவின் செய்தி
இந்த நிலையில், "இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்" என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் காஷ்மீரின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஒன்பது இடங்களில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா, பாகிஸ்தான் காஷ்மீரின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஒன்பது இடங்களில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இந்தியத் தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்ததுடன், பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதல்களில் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது.
இந்தியாவின் துல்லிய இலக்குகள்
அதன்போது, பாகிஸ்தானிய இராணுவ வசதிகள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்றும் இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்தத் தாக்குதலில் இந்திய ஆயுதப்படைகள் ஸ்டாண்ட்-ஆஃப் ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் துல்லியமான ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சியால்கோட்டில் உள்ள மெஹ்மூனா ஜோயாவில் உள்ள ஹிஸ்புல் முஜாஹிதீன் தளம், பர்னாலாவில் உள்ள மர்காஸ் அஹ்லே ஹதீத்தில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தளம் மற்றும் முசாபராபாத்தின் ஷவாய் நல்லாவில் உள்ள அதன் முகாம் ஆகியவை இந்தியாவால் குறிவைக்கப்பட்ட இலக்குகள் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
