இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் - எச்சரிக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர்
United Nations
Antonio Guterres
By Thulsi
இந்தியாவும் பாகிஸ்தானும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை உலகம் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பொதுச் செயலாளர் கூறினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களின் தொடரான "ஆபரேஷன் சிந்தூர்" பற்றிய இந்தியாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
ஏப்ரல் 22 ஆம் திகதி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஊடகங்களுக்கு அளித்த தனது கருத்துக்களில் கூறியுள்ளார்.
இதற்குக் காரணமானவர்கள் நம்பகமான மற்றும் சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி