சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புதிய பொருள்
Port of Colombo
Sri Lankan Peoples
China Ship In Sri Lanka
By Dilakshan
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்காக சீனாவில் இருந்து 12 கேன்ட்ரி கிரேன்களில் முதல் மூன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த கிரேன்கள் இன்று(02) கொண்டுவரப்பட்டுள்ளது.
கொண்டுவரப்பட்ட இந்த கிரேன்களை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொறுப்பேற்றுள்ளார்.
282 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
அத்துடன், சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து 'ஷென்ஹுவா-24' என்ற கப்பல் மூலம் இந்த கிரேன்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கிழக்கு முனையத்தில் 12 பெரிய கிரேன்கள் மற்றும் 40 டெர்மினல் கிரேன்கள் நிறுவப்பட உள்ளன, இதன் மொத்த செலவு 282 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவை, 72 மீற்றர் நீளம் கொண்டது மற்றும் ஒரே நேரத்தில் 26 கொள்கலன்கள் கொண்ட கப்பலை கையாளும் திறன் கொண்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 56 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்