கைலாகு கொடுத்த சரத் வீரசேகரவை அவமதித்தாரா சீன கப்பலின் கப்டன்!
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் யுவான் வாங்-5 இன்று காலை வந்தடைந்தது.
இந்நிலையில், கப்பலை வரவேற்பதற்காக சிறிலங்கா அமைச்சர்கள்சிலர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சென்றிருந்தனர்.
இவ்வாறு கப்பலை வரவேற்பதற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சீன கப்பல் கப்ரனுக்கு கைலாகு கொடுத்துள்ளார்.
எனினும் கப்ரன் சரத் வீரசேகரவுக்கு கைலாகு கொடுக்காது கையை உயர்த்தி காண்பிக்கும் புகைப்படம் ஒன்று சமுக ஊடங்களில் அதிகளவில் வலம் வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
விமலுக்கு அனுமதி மறுப்பு
இதேவேளை சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் கப்பலுக்குள் செல்வதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
இருப்பினும் அவர்கள் உட்செல்ல முடியாதென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சீனாவின் யுவான் வாங் – 5 அதி தொழில்நுட்ப ஆய்வு, கண்காணிப்பு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சிறிலங்கா வந்தடைந்த சீனக் கப்பல் இன்று முதல் 7 நாட்களுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
19 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டையில் தரித்து நிற்கும்
இதேவேளை இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் குறித்த கப்பல் நிறுவனம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.