இலங்கை - சீன மோதல் உருவாகும் அபாயம்! அரசுக்கு எச்சரிக்கை

sri lanka china sukas
By Vanan Jun 17, 2021 12:11 AM GMT
Report

இலங்கை அரசு கொழும்பில் சீன ஈழத்தை (துறைமுக நகரம்) வழங்கியுள்ளது. இதனால் இலங்கை வாழ் சிங்கள மக்கள் சீனாவுக்கு எதிராக போராடவேண்டிய காலம் இனி வரும்.

இனிமேல் தான் இதன் விளைவை இலங்கை அரசு அனுபவிக்கும் என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் எச்சரித்துள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் நேற்றிரவு (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

இந்த பயணத்தடையில் அப்பாவி மக்கள் கடுமையாக வதைக்கப்படுகிறார்கள். எவ்வித முறையான நிவாரணங்களும் வழங்கப்படாமல் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளார்கள். இது முட்டாள்தனமாக உள்ளது. கொரோனாவிலிருந்து தப்பினாலும் பசியினால் தற்கொலை செய்யும் நிலையே இன்று உருவாகி வருகிறது. மேலும் அரசினால் வழங்கப்பட்ட 5000 ரூபாய் உதவித்தொகை தகுதியானவர்களில் 10 வீதமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மீதியுள்ள 90 சதவீதமானவர்களின் நிலை என்ன? யாரும் பசியுடன் இருக்க கூடாது என்பதற்காக நாங்கள் வீதிக்கு இறங்கி களப்பணி செய்கிறோம்.

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்ட நாங்கள் செய்ததை காட்டிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 05 மடங்கு செய்திருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை.

அரசுடன் இருக்கும் டக்ளஸ், அங்கஜன்,பிள்ளையான், வியாழேந்திரன் என யாராக இருந்தாலும் இவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் தான் என்ன? இவர்கள் அமைச்சர்களாக இருந்து இராஜாங்க அமைச்சர்களாக இருந்து தமிழர்களுக்காக சாதித்தது என்ன? குறைந்தது மக்களின் பசியையாவது போக்கினார்களா? இல்லை.

சுகாதார துறை பற்றிய பூரண அறிவு எனக்கு இல்லாது போனாலும் பகுத்தறிவின் படி கொரோனா தொற்று உயிரிழப்பு அறிக்கைகளில் மிகைப்படுத்தல்கள் உள்ளதை உணர முடிகிறது. அது மட்டுமின்றி கொரோனா அறிக்கைகளிலும் குழப்பநிலை இருக்கிறது.

பெறுமதியான தமது உயிர்களை காப்பாற்றிக் கொள்ள எல்லோரும் சுகாதார வழிமுறைகளை பேணி நடக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022