யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புங்குடுதீவு காட்டுக்குள் நேற்றையதினம்(29) பனை வெட்டுவதற்காக சென்றபோது கருங்குளவி கொட்டுக்க இலக்கான நிலையில் அவரது மகன் அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இதன்போது, 10ஆம் வட்டாரம், புங்குடுத்வைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி