பயங்கரவாத தடை சட்டத்திலிருந்து தப்பிய ஹரக் கட்டா!
பிரபல பாதாள உலக குற்றவாளியான நந்துன் சிந்தக்க விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் நால்வருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது, தப்பிச் செல்ல சதி செய்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
சட்டத் தடை
இந்நிலையில், சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை மட்டுமே பராமரிக்க முடியாது என்றும், குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு எந்தவொரு சட்டத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |